fbox3

லண்டன்காரர்

£5.00

லண்டன்வாழ் விளிம்பு மனிதர்களைப் பற்றிய குறுநாவல். 2011ல் லண்டனில் நடந்த கலவரத்தின் பின்னனியில் இக்கதை நகர்கிறது.

84 in stock

SKU: 1L Categories: , ,

6 reviews for லண்டன்காரர்

  1. :

    சேனன் தன்னுடைய ‘லண்டன்காரரை’ கேட்டபடி ரெண்டு பார்சல் அனுப்பிவிட்டான். கையெழுத்துப் பிரதியாக இருக்கும்போதே ‘லண்டன்கார’ரை நான் வாசித்து விட்டேன். எழுத்திலும் சரி நேரில் பேசும்போதும் சரி சேனன் உன்மத்தம் பிடித்தவன் போலத்தான் இருப்பான். 2011 ஆம் ஆண்டு லண்டன் நகரம் பற்றியெறிந்த பல்லின இளைஞர்கள்-யுவதிகளின் கலகம் பற்றியது இந்தக் குறுநாவல். இன்றைய புகலிடச் சூழலில் சேனனால் மட்டும்தான் இப்படியான நாவலை எழுத முடியும் என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்.

    இப்படியான நாவலை சேனன் தவிர பிற யாரும் எழுதமுடியாது எனவும் திட்டவட்டமாகச் சொல்வேன்.இன்றைய இடதுசாரி நடவடிக்கையாளன் எனும் அவனது அரசியல் பின்புலமே இதற்கான வலுவான காரணம்.

    ‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிட்ட என்னுடைய ‘அரபுப் புரட்சி’ நூலில் லண்டன் கலவரம் பற்றி ஒரு கட்டுரை உள்ளது. வாசகர்களுக்கு நாவலின் காலப் பின்னணியைப் புரிந்துகொள்ள அக்கட்டுரை உதவும் என நிiனைக்கிறேன். தமிழகத்தில் ‘கட்டுமரம்’ பதிப்பகம் 100 பக்கங்கள் கொண்ட இந்தக் குறுநாவலை வெளியிட்டிருக்கிறது

  2. :

    குழப்பமாய் தெளியும் பின்நவீனத்துவ பிரதி!
    மேலோட்டமாக பார்த்தால் ஏதுமற்ற பிரதியாய் உடைந்து உடைந்து தொடரும் கதைக்களம் புலம்பெயர் சூழலின் வாழ்வியல் நெருக்கடிகளையும் விளிம்புநிலை மாந்தர்கள் மீதான இனத்துவேசத்தையும் சாதிய பகட்டையும் வேறொரு கோணத்தில் பதிந்திருக்கிறது.
    நிறவெறி,இனத்துவேசம்,சாதியம்,ஓரின சேர்க்கையாளர்கள்,புலம்பெயர் முதலாளிகளின் நயவஞ்சகம், கடைநிலை ஊழியர்கள் மீதான உழைப்புச் சுரண்டல் என மிகக் குறுகிய வெளிகளுக் குள்ளேயே பயணித்தாலும் லண்டன்சார் தொழிலாளர் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியல் குறித்தும் இடையிடையே கதைக்கேற்றளவில் விவரித்திருக்கிறார் Tu Senan.

    கேரக்டர்கள் அளவில் யாரையோ நிஜத்திலும் நக்கலடித்திருப்பதாய் தோன்றினாலும் சமகால இந்திய அரசியலோடு பொருத்தியிருப்பது சிறப்பு.
    இறுதி வடிவமாக நிறைவு பெற்றிருக்கும் சுயவிமர்சன புத்தக அறிமுகம் அபாரம்.

  3. :

    29 September at 06:52 · Edited ·
    ஒரு சிறு நிகழ்வு கலவரமாக மாறுகிறது.. அதில் பாவப்பட்டவர்களும் பாதிக்கப்படுகிறார்கள், ஒரு பணக்காரனும் பாதிக்கப்படுகிறான்

    இதில் பாவப்பட்டவர்கள் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர்.. பணக்காரன் இதை சூழ்ச்சியாகப் பயன்படுத்தி தியாகியாகிறான்.. தேர்தல் அரசியலில் வென்று பதவியும் பெறுகிறான்..

    சேனன் எழுதியுள்ள லண்டன்காரர் என்னும் சிறு நாவலின் உள்ளடக்கம் இதுதான்…

    இது சாதாரணமாக நம் அரசியல்வாதிகளின் உண்மைக்கதை.. கொஞ்சம் முயன்றால் சுவாரஸ்யமானதொரு திரைக்கதை..

    ஆனால் லண்டனிலும் இதுதான் நிகழ்கிறது என்பதுதான் இந்நாவல் தரும் வியப்பு..

    ஒரு சிறு உணவகம், அதன் முதலாளி, பணியாளர்கள் என புலம்பெயர் தமிழர்கள்.
    இவர்களுடன் கறுப்பினப் பெண், ஒரு போர்த்துக்கீசியன்.. இவர்களே இந்நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள்

    தன் பால் ஈர்ப்பு,லண்டனில் நிகழ்ந்த கறுப்பு வெள்ளை இனக்கலவரத்தின் சிறு புனைவு இவையே நாவலின் அடிப்படை நிகழ்வுகள்..

    வெகு எளிமையான, எள்ளலான மொழியில் சேனன் கதையைச் சொல்லியிருக்கிறார்.. கதைக்கென்று முடிவொன்றுமில்லை என்பது சிறப்பு..

    சேனன் யார், எங்கிருக்கிறார்,
    இதுதான் இவரது முதல் புத்தகமா,
    அவர் எந்த குழுவைச் சார்ந்தவர்..
    எதுவுமே எனக்குத் தெரியாது..

    இந்த நாவல் எனக்குப் பிடித்திருக்கிறது என்பதைச் சொல்வதற்கு அவை அவசியமுமில்லை..

  4. :

    1 October at 14:00 · Edited ·
    லண்டன்காரர் –
    லண்டனில் வசிக்கும் விளிம்புநிலை ஆசிய, ஆப்ரிக்கர்கள் தான் கதை மாந்தர்கள் . இவர்களுக்கிடையேயான உறவு , பூசல்களோடு ஐரோப்பியச் சமூகத்தின் இனத்துவேச அரசியலை , வர்க்க வேறு பாட்டிற்கான காரணங்களை நூறு பக்கங்களைக் கொண்ட நாவலுக்குள் மெல்லிய பகடியுடன் பேசுகிறார் ஆசிரியர் .

    தன்னைப்பற்றி பகடி செய்யும் பதிவுகளுக்கு லைக் இட்டவரை நேரிலோ , தொலைபேசியிலோ அழைத்து ஒப்பாரி வைக்கவோ , மிரட்டவோ செய்யும் தமிழ் எழுத்தாளப் பெருமக்கள் சுய பகடியென்றால் என்னவென்று நாவலின் இறுதி அத்தியாயத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் .
    ஆசியர் ; சேனன்
    கட்டுமரம் பதிப்பகம் (மெய்யாகவே ! பதிப்பக பெயர் கட்டுமரம் தான் . பகடி அல்ல )

  5. :

    1 October at 14:19 · Edited ·
    என் நட்புவட்டத்தில் இருக்கும் இலக்கிய நண்பர்களுக்கான பதிவு இது .சிறந்த ஓர் கவிஞரும் ஓர் ஆற்றல் மிக்க படைப்பாளியும் ஆன அண்ணன் கவிதா பாரதி லண்டன் காரர் எனும் நூலின் உள்ளடக்கம் பற்றி முகநூலில் பதிவிட்டிருந்தார்.அதை படித்ததும் அந்த புத்தகத்தை படிக்கும் ஆவல் மேலிட கூகுள் உதவியுடன் அந்த சேனன் எனும் எழுத்தாளரை தொடர்பு கொண்டு புத்தகம் கேட்டேன் .அவரும் அனுப்பி வைத்தார்.. உண்மையில் ஓர் காத்திரமான படைப்பு “லண்டன் காரர் ” தன் எழுத்தாற்றலை பாருங்கள் என எங்கும் திணிக்காமல் அடுத்த பக்கத்தில் இதைத்தான் சொல்லியிருப்பார் என நாமே ஊகித்து 2பக்கங்களை புரட்டிவிட்டு படிக்கும் மனநிலை யை உருவாக்காமல் அந்த கதாபாத்திரங்கள் பற்றிய சொல்லாடல் களை அருமையாக எடுத்துச்சென்றுள்ளார் எழுத்தாளர் சேனன் அவர்கள் .நான் வாழுகின்ற புறசூழலை கதைக்களமாக கொண்டது என்னும் ஆழமாக வாசிக்க வைத்தது. ஒவ்வொரு பாத்திரத்தையும் அந்த வாழ்க்கை சூழலோடு உழாவவிட்டது அருமை .ஓர் மனிதனை சந்தர்பமும் அவன் வாழும் சூழலுமே அவன் வாழ்வை தீர்மானிக்கிறது என்பதை எந்த இடத்திலும் குறிப்பிடாமல் எம்மை உணர வைத்ததில் அவருக்கு எனது பாராட்டுக்கள். சமீபத்தில். அய்யா முத்துலிங்கம் அவர்களது ஆட்டுக்கால் புட்டு சிறுகதையின் பின் என்னை கவர்ந்த குறுநாவல் லண்டன் காரர் எல்லாவற்றையும் தாண்டி யாரும் அந்த நாவலை விமர்சிக்கா வண்ணம் தானே விமர்சித்திருப்பது அபாரம்
    -கவிஞர் வல்வெட்டி தவராசா (thava krish)

  6. :

    1 October at 18:22 · Edited ·
    2011 இல் லண்டலில் ஏற்பட்டகலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே லண்டன்காரர் என்னும் குறு நாவல். லண்டன் விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகளையும்,போராட்டங்களையும் அறிய அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல் இது. தனியே தமிழ் கதாபத்திரங்களை மையமாக வைத்து கதையைக் கொண்டு செல்லாமல் போர்த்துக்கீசு , கருப்பு இன விளிம்பு மக்களையும் கதையினூடு இணைத்துள்ளமை ஒரு சிறப்பம்சமாகும் முதல் பகுதியான ஐயர் ,சாந்தேல கதை சற்று மெதுவாக நகர்ந்தாலும் ( அது சற்று bore அடித்தாலும்) கலவரத்தின் பின் கதை செல்லும் வேகம் மிகவும் அபாரம். கலவரத்தை எவ்வாறு முதலாளித்துவ அரசு மற்றும் நிற வெறி ஊடகங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என்பதை நக்கலுடன் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
    எழுத்தாளர் ஒரு இடதுசாரிய கட்சியின் உறுப்பினர் என்பதால் வர்க்க வேறுபாட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும், முதலாளித்துவ அரசின் கொடுமைகளையும் அல்லாது இடதுசாரிய கட்சியின் தற்போதைய தேவையையும் மிக ஆழமாக எடுத்துரைக்கின்றார். லண்டன் கட்டுமரம் பதிப்பகத்தினால் வெளியிடப் பட்டிருக்கும் இந்த நாவல் தமிழ் இலக்கிய உலகிற்கு மிக முக்கிய பதிவு ஆகும் Tu Senan

Add a review