Free songs

FORGOT YOUR DETAILS?

லண்டன்காரர்

லண்டன்வாழ் விளிம்பு மனிதர்கள் பற்றிய குறுநாவல்

லண்டன்காரர்

இணையத்தில் இந்தப் புத்தகத்தை வாங்க

புத்தகக் கடை

லண்டன்-ஈஸ்ட்காம் புத்தகக்கடை

CS Print and Books
317, 1st floor,
High street north,
E12 6SL,
London, UK
Phone 00 44 7908050217

பாரதி புத்தகாலயம்

சென்னை – மதுரை – சேலம் - ஈரோடு
Bharathi Pathippagam
108, Usman Road, T Nagar,
Tamil Nadu
India
Phone: 044 - 24340205

டிஸ்கவரி புக் பேலஸ்

Discovery Book Palace (P)Ltd
No.6, Magavir Comlex, 1st Floor
Munusamy Salai, K K Nagar West
Chennai - 600078
Tamil Nadu, India.
(Near Pondichery Guest house)
Ph"+91 44 65157525 , Cell +91 9940446650
Mail: discoverybookpalace@gmail.com
Online : லண்டன்காரன்

Kiri Shanth

அருண்மொழிவர்மன்

amvarman25@gmail.com

Proceed to Check out -then- உங்களது விலாசம் மற்றும் இதர தகவல்களை வழங்கியபின் Proceed to Paypal. PayPal உங்களிடம் இருந்தால் அதன்மூலம் விலையைச் செலுத்தலாம். இல்லாவிட்டால் Pay with debit or credit card என்பதைத் தெரிவு செய்து உங்கள் கார்ட் மூலம் விலையைச் செலுத்தலாம். (Paypal நுழைவவதற்கான பகுதியில் நுழைவு தகவல்களை வழங்குவதற்கு கீழே இதற்கான லிங்க் உண்டு)

பிரசுரமான விமர்சனங்கள்

முழுவதும் படிக்க
பௌஸர்
‘சுத்தி சுத்தி சுப்பர்று கொல்லைக்குள் நிற்கின்ற’ மரபினைக் கடந்து, பல்லின, பல்காலாச்சார வாழ்வை புகலிட தமிழிலக்கிய வளத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கும் அரசியல், சமூக பங்களிப்பாளன் ஒருவனின் சமூக வாழ்க்கைப் பயணத்தின் ஒரு சில பக்கங்கள் இவை. ….படைப்பாளி என்பவன் ஒரு கலைஞன் மட்டுமல்ல, துன்பப்படும், ஒடுக்குதலுக்குள்ளாகும் மக்களுடன் நிற்பவன் என்பதை அழுத்திச் சொல்லும், புகலிட தமிழ் படைப்பில் முதன்மையான பிரதி இது.
கஜன்
2011 இல் லண்டலில் ஏற்பட்டகலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே லண்டன்காரர் என்னும் குறு நாவல். லண்டன் விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகளையும்,போராட்டங்களையும் அறிய அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல் இது. தனியே தமிழ் கதாபத்திரங்களை மையமாக வைத்து கதையைக் கொண்டு செல்லாமல் போர்த்துக்கீசு , கருப்பு இன விளிம்பு மக்களையும் கதையினூடு இணைத்துள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்
தவா கிரிஸ்
அடுத்த பக்கத்தில் இதைத்தான் சொல்லியிருப்பார் என நாமே ஊகித்து 2பக்கங்களை புரட்டிவிட்டு படிக்கும் மனநிலை யை உருவாக்காமல் அந்த கதாபாத்திரங்கள் பற்றிய சொல்லாடல் களை அருமையாக எடுத்துச்சென்றுள்ளார் எழுத்தாளர்
கவிதா பாரதி
ஒரு சிறு நிகழ்வு கலவரமாக மாறுகிறது.. அதில் பாவப்பட்டவர்களும் பாதிக்கப்படுகிறார்கள், ஒரு பணக்காரனும் பாதிக்கப்படுகிறான் இதில் பாவப்பட்டவர்கள் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர்.. பணக்காரன் இதை சூழ்ச்சியாகப் பயன்படுத்தி தியாகியாகிறான்.. தேர்தல் அரசியலில் வென்று பதவியும் பெறுகிறான்.. சேனன் எழுதியுள்ள லண்டன்காரர் என்னும் சிறு நாவலின் உள்ளடக்கம் இதுதான்...
கடங்கநேரி யான்
லண்டனில் வசிக்கும் விளிம்புநிலை ஆசிய, ஆப்ரிக்கர்கள் தான் கதை மாந்தர்கள் . இவர்களுக்கிடையேயான உறவு , பூசல்களோடு ஐரோப்பியச் சமூகத்தின் இனத்துவேச அரசியலை , வர்க்க வேறு பாட்டிற்கான காரணங்களை நூறு பக்கங்களைக் கொண்ட நாவலுக்குள் மெல்லிய பகடியுடன் பேசுகிறார் ஆசிரியர் .
கோ பிரின்ஸ்
லண்டன் எனும் சொர்க்கபுரி குறித்து கனவு காணும் 3ஆம் உலக நாட்டைச் சேர்ந்த யாவருக்கும் சேனன் காட்டும் லண்டனின் புதிய பரிணாமமும், அது பாய்ச்சும் வெளிச்சமும் நிலைகுலையச் செய்பவை... லண்டன் சென்றால் ஏகத்துவமான இன்பமயமான வாழ்க்கை எனும் பிம்பத்தை தகர்த்து சாலையோர தூக்கம், தங்கும் வீட்டிற்கே சிங்கி அடிக்கவேண்டியிருக்கும் வாழ்க்கை சூழல் கனக்கச் செய்கிறது எதார்த்தம்...
கோமகன்
ஒரு விசரனப்பற்றி இன்னொரு விசரன் எழுதிய கதை (சேனனின் லண்டன்காரர் ) நான் ஏறத்தாழ இரண்டு வருடங்களாக லண்டன் காரனாக இருந்த காரணத்தால் நாவலின் தலைப்பை பார்த்தவுடன் லண்டன் பீப்பிள்ஸ் உடைய அதிமேதாவித்தனங்களையும், அதனுடன் பயணிக்கின்ற அவர்களுடைய வாழ்வியல் விழுமியங்களையும் சேனன் புதிதாக என்ன சொல்லப்போகின்றார் என்று எண்ணிக்கொண்டே பக்கங்களைப் புரட்டினேன் . எடுத்த எடுப்பிலேயே நான் இருந்த வாழ்கை காலத்தின் மிச்ச சொச்சங்களை லண்டன்காரர் பேசத்தொடங்கியது . உலக மக்களால் "லண்டன்" என்று வாய்பிளந்து பார்க்கப்படுகின்ற பெருநகரின் அடித்தட்டு (இழி ) மக்களது வாழ்வின் அவலங்களையும், அதனூடே பயணிக்கின்ற மூன்றாம் தர அரசியல் நிலைப்பாடுகளையும் , ஓரினசேர்க்கையாளர்கள் தொடர்பான பார்வை, அண்மையில் நடைபெற்ற கலவரம், அந்தக் கலவரத்தின் நுண்ணரசியல் என்று பல கதைக்களங்களையும் கதை மாந்தர்களையும் லண்டன்காரர் மனத்திரையில் விரியச்செய்தது. இதில் சாந்தெலா "சோசலிஸ்ட் "ஆக சோசலிஸ்ட் கட்சியில் இணைவதும், அதுசம்பந்தமான உரையாடல்களும், கோட்பாடுகள் மற்றும் தத்துவங்கள் எப்படி ஓர் அமைப்பில் புனிதமாக பாதுகாக்கப்படுகின்றது என்பதை நூலாசிரியர் எள்ளி நகையாடியிருக்கின்றார். "நாவல் என்றால் எத்தனை பக்கங்கள் இருக்கவேண்டும் என்று வரையறை இல்லை, மாறாக அது சொல்லவந்த செய்தியை சரியாக சனங்களிடம் சொல்லியிருக்கின்றதா என்பதே முக்கியம்" என்பதற்கு இந்த லண்டன்காரர் ஒரு சரியான எடுத்துக் காட்டு. இதன் அனைத்து செய்திகளும் மொத்தம் 98 பக்கங்களுக்குள் அடங்கியிருக்கின்றன . அதற்குள் ஆரவாரங்கள், உருவல் எடுகோள்கள் ஏதும் இல்லாமல் தான் சொல்ல நினைத்ததை நூலாசிரியர் சரியாகவே சொல்லி இருக்கின்றார் நாவலை வாசிக்கும் பொழுது பல இடங்களில் கடும் வறட்சியுடன் கட்டுரைத்தனமாக இருக்கின்றது. எல்லோரும் தான் கதை சொல்கின்றார்கள்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக வாசகனை வசப்படுத்தும் .ஆனால், இந்த நூலாசிரியர் யாருமே யோசிக்காத ஒரு பக்கத்தைப் பிடித்து தனது நாவலை முடித்திருக்கின்றார். ஒரு படைப்பானது பொதுவெளியில் வந்ததின் பின்னர் அந்தப் படைப்பை பலர் கூடியிருந்து தங்களது விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றமாதிரி "விமர்சனம் " என்ற பார்வையில் கும்மியடிப்பதை தவிர்க்குமுகமாக நூலாசிரியரே தனது நாவலுக்கு தானே விமர்சனம் வைத்து நாவலை முடித்து வைத்திருக்கின்றார். இது உண்மையிலேயே இது பாரா ட்டப்படேண்டிய விடயம். இறுதியாக ஒருசில கேள்விகள் வருவது இயல்பாகின்றது ................. 01 நூலாசிரியர் சாந்தெலாவை அடிக்கடி கறுப்பி என்று அழைக்காது பெயர் சொல்லியே அழைத்திருக்கலாம். இது ஒரே நிறத்தை உடைய உயிரி அதே நிறத்தை உடைய அடுத்த உயிரியைப்பார்த்து தனது இழிபார்வையை வெளிப்படுத்துவது போலாகும். 02 ஓரினச்சேர்க்கையாளர்கள் தனியே இழிநிலை மக்களிலேயா இருக்கின்றார்கள்? நடுத்தர மற்றும் உயர் நிலை மக்களிடையேயும் இந்த ஓரினச்சேர்கையாளர்கள் இருக்கின்றார்கள் தானே? ஏன் இங்குதான் இருக்கின்றார்கள் என்று தூக்கலாக காட்டவேண்டும்? இவைகளை தவிர்த்து பார்க்கும் பொழுது லண்டன்காரர் காத்திரமான நாவல் என்றுதான் சொல்லவேண்டும் . கோமகன் 09 கார்த்திகை 201
நந்தன் ஸ்ரீதரன்
வெள்ளியில் செய்த கருக்கருவாள் மாதிரி வானத்தில் நிலா பளபளவென்று வந்துவிட்டது. இப்படியொரு இரவில் இப்படியொரு ஒளி கூடிய நிலவைப் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்கள் எல்லாரும் பயமுறுத்துவது போல இல்லாமல் அடுத்து ஒரு புயல் வராமலேயே போய் விடுமோ என்று நப்பாசை வருகிறது. நிற்க, எழுத வந்தது அது அல்ல. நேற்றைய பொழுது இன்டர்நெட்டும் இல்லாத போன்களும் இல்லாத டிவியும் இல்லாத வெறும் நீர் மட்டும் சூழ்ந்த பொழுதாக இருந்தது. எப்போதும் எனது பையில் படிப்பதற்கென எதாவது புத்தகம் கிடக்கும். நேற்று பையை துழாவிப் பார்த்தபோது சேனன் எழுதிய லண்டன்காரர் என்ற புத்தகம் மட்டும்தான் இருந்தது. அதை எனக்கு யார் ரெக்கமெண்ட் செய்தது என்ற யோசனையோடேயே புத்தகத்தைப் பிரித்து உட்கார்ந்தேன். இது அவரது முதல் நாவல் என்பதால் துவக்கத்தில் கதைக் களத்துக்குள் நுழைவதற்கான சிறு சிக்கலோடுதான் கதை துவங்கியது. அட போதுமே அப்புறம் படித்துக் கொள்ளலாமா என்று மனம் யோசிக்கத் துவங்கியபோது கதைக்குள் ஒரு மாயாஜாலம் நிகழ்ந்தது. பளிச்சென்று கதை செல்லும் பாதை தெளிவுபட்டது. கதை பிரமாதமாக செல்ல ஆரம்பித்தது. லண்டன் வாழ் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய கதை. தமிழர்கள், கறுப்பர்கள், ஸ்பானியர்கள், போர்ச்சுகீசியர்கள் என்று எல்லோரும் வருகிறார்கள். லண்டனில் நடைபெற்ற ஒரு வரலாற்று சம்பவம்தான் கதையின் அடிப்படை வேறு.. எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாத எழுத்து. உள்ளே ஓர் அங்கதம் கலந்த நகைச்சுவை தொடர்ந்து வருகிறது. பொதுவாக தமிழில் வெறும் தமிழ்ச்சூழல் கதைகளாகவே குவிந்து வருகின்றன என்பது என் எண்ணம்.. மற்றைய மொழிகளைப் போல வேறு வேறு நிலங்களில் வாழும் மனிதர்கள் தத்தம் வாழ்வியலைப் பதிவு செய்ய வேண்டியதும் அவசியம் என்றே நான் எப்போதும் நினைப்பேன். அந்த அடிப்படையிலேயே நண்பர் சரவணனை அவர் சார்ந்த துறையை அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுதுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். அந்த வகையில் இந்த நாவல் லண்டனில் விளிம்பு நிலையில் வாழும் மக்களை அடிப்படையாக வைத்து வந்திருக்கும் முக்கியமான நாவல் என்றே நான் சொல்லுவேன்.. விவரித்து எழுத எனக்கு சொற்கள் போதவில்லை. எல்லாரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் என்று பரிந்துரைக்கிறேன். கட்டுமரம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்த புத்தகத்தை டிஸ்கவரி புக் பேலசில் வாங்கினேன். விலை 125 ரூபாய் என நினைக்கிறேன். இந்த புத்தகத்தை எனக்குப் பரிந்துரைத்த நண்பர் யாரென்று நினைவில் இல்லை.. ஒரு வேளை நீங்களா விஜய் மகேந்திரன்..? யாராக இருந்தாலும் எனக்கு படிக்க பரிந்துரைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். நண்பர்கள் அவசியம் படியுங்கள்.
தமிழ் கருத்துக்களம் உரையாடல்- சோதிலிங்கம் தேவகுமாரி
Uma -about லண்டன்காரர்

லன்டன் கலவரம்

பின்னனி விபரங்கள்

On Thursday 4 August police shot dead Mark Duggan on the streets of Tottenham. Local outrage at the killing was the spark for what followed in north London...

TOP